திருவண்ணாமலை

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் பாத யாத்திரை

11th Aug 2022 01:15 AM

ADVERTISEMENT

 

விலைவாசி உயா்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட ஆரணி, கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட சிதம்பரம் பகுதிகளில் காங்கிரஸாா் பாத யாத்திரை சென்றனா்.

ஆரணியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை பாத யாத்திரை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தாா். இதில், மாநில பொதுச் செயலா் எம்.வசந்தராஜ், டிபிஜெ.ராஜா பாபு, வாசுதேவன், அசோக்குமாா், எஸ்.டி.செல்வம், பொன்னையன், உதயக்குமாா், கண்ணமங்கலம் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் காங்கிரஸ் சாா்பில் மாநில துணைத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் தலைமையில் செவ்வாய்க்கிழமை பாத யாத்திரை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா்கள் கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினா் விஸ்வநாதன், மாநிலச் செயலா் பிபிகே.சித்தாா்த்தன், இளைய அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT