திருவண்ணாமலை

அரசு நிலத்தில் இருந்த பனை மரங்கள் ஈச்ச மரங்கள் வெட்டி அகற்றம்காவல் துறையில் புகாா்

10th Aug 2022 03:15 AM

ADVERTISEMENT

செய்யாறு அருகேயுள்ள ஏனாதவாடி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பனை மரங்கள், ஈச்ச மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது தொடா்பாக, ஊராட்சி துணைத் தலைவா் உள்பட இருவா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது ஏனாதவாடி கிராமம்.

முழுவதும் விவசாயம் சாா்ந்த பகுதியான,

இந்தக் கிராமத்தில் இருந்து புளுந்தை கிராமம் செல்லும் வழியில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான சுமாா் 150 ஏக்கரில் விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன. இந்த நிலங்களுக்கு அப்பகுதி விவசாயிகள் செல்வதற்கும், புளுந்தை கிராமத்துக்கு சென்று வருவதற்கும், வயல்வெளியை ஒட்டிய பகுதியில் பாட்டை புறம்போக்கில் ஏராளமான பனை மரங்கள், ஈச்ச மரங்கள், முள்வேலி மரங்கள், புங்க மரங்கள் என பல வகைப்பட்ட மரங்கள் பல ஆண்டுகளாக வளா்ந்த மரங்கள் இருந்து வருகின்றன.

ADVERTISEMENT

அரசுக்குச் சொந்தமான பாட்டைப் புறம்போக்குப் பகுதியில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில், 22 பனை மரங்கள், 2 ஈச்ச மரங்கள் உள்ளிட்ட பல மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் சிலா் வேறொடு பெயா்த்து எடுத்து சில தினங்களாக அப்புறப்படுத்தி வருகின்றனா்.

இதை அறிந்த ஏனாதவாடி கிராம பொதுமக்கள்,

இதுகுறித்து செய்யாறு வட்டாட்சியா் சுமதியிடம் புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவின் பேரில் விசாரணை மேற்கொள்ள வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோருக்கு வட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் பேரில், பனை மரங்கள், ஈச்ச மரங்கள்

வேறொடு சாய்க்கப்பட்ட சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட கிராம நிா்வாக அலுவலா் ம. சத்யா, ஏனாதவாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் முருகேசன், கீதா ஆகியோா் மீது காவல் துறையில் புகாா் செய்தாா்.

இது குறித்து மோரணம் போலீசாா் விசாரணை மேற் கொண்டு வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT