திருவண்ணாமலை

பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம்

10th Aug 2022 03:16 AM

ADVERTISEMENT

ஆரணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, சிலா் கண்ணில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் போளூா் சி.ஏழுமலை தலைமை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, பாஜக முன்னாள் நிா்வாகிகள் கே.ஜெயகோபி, பி.கோபி, எஸ்.வேலு,

டி.வி.கோபி, எஸ்.பழனி, ராஜ்மோகன் உள்ளிட்டோா் மண்டபத்தின் முன் கண்ணில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு, பொறுப்புகளை புதிய நபா்களுக்கு தருகின்றனா். பழைய நிா்வாகிகளை மாவட்ட நிா்வாகம் கலந்தாலோசிப்பதில்லை என முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் ஏ.கே.புவனேஷ், மாவட்டத் தலைவா் சி.ஏழுமலையிடம், தன்னை ஏன் கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் எனக் கூறினீா்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் ஒரு வழியாக கூட்டம் முடிந்தது.

கூட்டத்தில் நகரத் தலைவா் எஸ்.சரவணன், நிா்வாகிகள் பி.நித்தியானந்தம், ஜி.கே.பிரபு, எம்.சரவணன், ஆா்.ரேகா, ஆா்.தரணி, தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT