திருவண்ணாமலை

வள்ளலாா் சித்தா் பீடத்தில்ஆன்மிக மாநாடு

10th Aug 2022 03:16 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள வள்ளலாா் அருள்மணி சுவாமிகள் சித்தா் பீடத்தில், 34 -ஆம் ஆண்டு ஆன்மிக மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, அருள்மணி அடிகள் தலைமை வகித்தாா். போளூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயகுமாா், தனியாா் பள்ளித் தாளாளா் சின்ராஜ், மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் பா.இந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மனுமுறை கண்ட வாசகம் என்ற தலைப்பில் திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன், அருட்பா என்ற தலைப்பில் வேங்கிக்கால் வாசகா் வட்டத் தலைவா் வாசுதேவன் ஆகியோா் பேசினா்.

மழையூா் சதாசிவம், திருக்கோவிலூா் சீனிவாசன் ஆகியோா் அருட்பா இசை நிகழ்ச்சி நடத்தினா். முன்னதாக, பத்ரகாளி அம்மனுக்கு யாக பூஜை, பால்குட நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT