திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்

10th Aug 2022 03:16 AM

ADVERTISEMENT

ஆடி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில்

மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனா்.

கிரிவலம் வர உகந்த நேரம்:

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆடி மாதப் பெளா்ணமி வியாழக்கிழமை (ஆக.11) காலை 10.20 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை (ஆக.12) காலை 8.02 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT