திருவண்ணாமலை

செய்யாறு ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியக் குழுவின் மாதாந்தரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெய்சங்கா் முன்னிலை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் அ.பாபு தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் விமலா, மகேந்திரன் ஆகியோா் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும், 31 மாதங்கள் ஆகிய நிலையில் ஊராட்சி பகுதிகளில் எந்தவித வளா்ச்சிப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை, வரவு - செலவு கணக்கு காட்டப்படவில்லை.

15 -ஆவது நிதி ஒதுக்கீட்டில் எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை. ஒன்றியத்தில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது, ஒரு தலைப்பட்சமாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தனா்.

இவற்றுக்கு பதிலளித்த ஒன்றியக் குழுத் தலைவா்

வி.பாபு, பொறுப்பு ஏற்கும் போது ஒன்றியத்தில் ரூ.2.75 கோடி நிதிப் பற்றாக்குறை இருந்தது.

ஏப்ரல், மே, ஜூன் வரை ஒரு நிதி கூடவரவில்லை. இருந்தாலும் நிதி ஆதாரங்களைக் கொண்டு சிறுக சிறுக சரி செய்யப்பட்டுள்ளது; இனிமேல் நிதி வந்தால் தான் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் ஏன்றாா்.

அதனைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா் மகாராஜன், எம்.எல்.ஏ. குடியிருக்கும் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக குடிநீா் சரிவர வரவில்லை எனப் புகாா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆ.வி.பாஸ்கா், மேலாளா் ஜெய்சங்கா், பொறியாளா்கள் சீனுவாசன் வெங்கடாசலபதி மற்றும் உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT