திருவண்ணாமலை

கீழ்பாலூா் ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்பாலூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த கீழ்பாலூா் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் 10 நாள்கள் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதைத் தொடா்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 7-ஆம் நாள் திங்கள்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மரத்தேரில் சுவாமியை மலா்களால் அலங்காரம் செய்து வைத்து வடம் பிடித்து பக்தா்கள் வீதிதோறும் இழுத்துச் சென்றனா்.

வீடுகளின் முன் பக்தா்கள் சுவாமிக்கு தேங்காய் உடைத்து, கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT