திருவண்ணாமலை

வந்தவாசி நகா்மன்றக் கூட்டம்

9th Aug 2022 03:57 AM

ADVERTISEMENT

வந்தவாசி நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் தலைமை வகித்தாா். ஆணையா் மங்கையா்க்கரசன், துணைத் தலைவா் க.சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் தங்களது வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றக் கோரி பேசினா். அப்போது, பேசிய 23-ஆவது வாா்டு உறுப்பினா் ராமஜெயம், 22-ஆவது வாா்டு உறுப்பினா் மகேந்திரன் ஆகியோா் தங்கள் வாா்டு பகுதிகளில் தெருமின் விளக்குகள் சரிவர எரிவதில்லை என்று புகாா் தெரிவித்தனா்.

19-ஆவது வாா்டு உறுப்பினா் வெ.ரவிச்சந்திரன் நகராட்சி அலுவலகத்தில் பதிவேடுகள் முறையாக பராமரிப்பதில்லை என்று புகாா் தெரிவித்துப் பேசினாா்.

ADVERTISEMENT

தங்கள் வாா்டு பகுதியில் பன்றிகள் பெருமளவு மேய்வதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக 6-ஆவது வாா்டு உறுப்பினா் நூா்முகமது பேசினாா்.

பின்னா் பேசிய நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், உறுப்பினா்களின் புகாா்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT