திருவண்ணாமலை

போதைப்பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு:ஆட்சியா் உத்தரவு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 11-ஆம் தேதி முதல் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுத்தல், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 10-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் கலந்துகொள்ளும் போதைப் பொருள்கள் தடுப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

இதைத் தொடா்ந்து, வருகிற 11-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போதைப்பொருள்கள் தடுப்பு, விழிப்புணா்வுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 11-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசின் பல்வேறு துறைகள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், தனியாா் அமைப்புகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையில் பல்வேறு விழப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.பிரியதா்ஷினி, வேளாண் துறை இணை இயக்குநா் பாலா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் குமரன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் வினோத்குமாா், தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT