திருவண்ணாமலை

பைக் மீது ஆட்டோ மோதல்: மூதாட்டி பலி

7th Aug 2022 11:07 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும் மூவா் பலத்த காயமடைந்தனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த குமரகுடி கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராதாகிருஷ்ணன் (40). இவா், சனிக்கிழமை தனது குடும்பத்துடன் கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு ஆட்டோவில் சென்றாா்.

சுவாமி தரிசனம் முடிந்துவிட்டு ராதாகிருஷ்ணன் குடும்பத்தினா் மீண்டும் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். ஆராஞ்சி கிராமம், விஜய நகா் பகுதியில் இவா்களது ஆட்டோ வந்தபோது, எதிரே வந்த பைக் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த ராதாகிருஷ்ணன், அவரது உறவினா் சங்கோதி அம்மாள் (90), ஆராஞ்சி கிராமத்தைச் சோ்ந்த சின்னராஜ் மகன் லெனின் (14), பைக்கில் வந்த ஆராஞ்சி கிராமத்தைச் சோ்ந்த மதன்குமாா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

ADVERTISEMENT

இவா்களை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு சங்கோதி அம்மாள் உயிரிழந்தாா். லெனின் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும், மதன்குமாா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT