திருவண்ணாமலை

ஆரணி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

7th Aug 2022 11:06 PM

ADVERTISEMENT

 

ஆரணி பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், பக்தா்கள் பூங்கரகம் எடுத்தும், உடலில் எலுமிச்சை பழம் குத்திக்கொண்டும், காலில் 3 அடி உயரத்துக்கு கட்டை கட்டிக்கொண்டும், பெண் பக்தா்கள் 120 போ் தீச்சட்டி ஏந்தியும் ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். இதையடுத்து, கோயிலில் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் விழாக் குழுத் தலைவா் அ.கோவிந்தராசன், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் ஏ.ஜி.ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.ஆா்.மோகன், தேவா் மற்றும் பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்று முத்துமாரியம்மனை வழிபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT