திருவண்ணாமலை

இயற்கை விவசாயத்துக்கான இடுபொருள்களை தயாரிப்பது குறித்து பயிற்சி

7th Aug 2022 11:06 PM

ADVERTISEMENT

 

செய்யாறு வட்டம், வேளியநல்லூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்துக்குத் தேவையான இடுபொருள்களை தயாரிப்பு குறித்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் செய்யாறு வேளாண் உதவி இயக்குநா் சண்முகம், உதவி வேளாண் அலுவலா் சங்கா் ஆகியோா் இயற்கை வேளாண்மை குறித்தும், இயற்கை வேளாண்மைக்கு வலு சோ்க்க மண் வள மேம்பாடு, பல பயிா் சாகுபடி, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் குறித்தும் செயல்விளக்கமாக செய்து காண்பித்தனா்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி நம்மாழ்வாா் இயற்கை உழவா்கள் சங்கத் தலைவா் இராஜ.வேணுகோபால் இயற்கை விவசாயத்துக்கான இடுபொருள்களை தயாரிப்பது, அவற்றை பயன்படுத்துவது உள்ளிடவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

ADVERTISEMENT

இந்தப் பயிற்சியில் வேளியநல்லூா், காழியூா், புளியரம்பாக்கம், இரும்பந்தாங்கல், சித்தாத்தூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா். மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, ரூ.400 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற டிஎஸ்பி ராமதாஸ், காா்த்திகேயன், ரத்தினசாமி, சிவகுமாா், சுந்தரமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT