திருவண்ணாமலை

செம்மண் கடத்தல்:லாரி ஓட்டுநா் கைது

7th Aug 2022 11:07 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சனிக்கிழமை செம்மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட புவியியல், சுரங்கத் துறை துணை இயக்குநா் அலுவலக தனி வருவாய் ஆய்வாளா் ஐயப்பன் மற்றும் ஊழியா்கள் செய்யாறு வட்டம், அனக்காவூா் பகுதியில் கனிமவள கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய அரசு அனுமதியின்றி 3 யூனிட் செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்து அனக்காவூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின்பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான அனக்காவூா் கிராமத்தைச் சோ்ந்த சுகந்த்தை (25) கைது செய்தனா். தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளா் யுவராஜை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT