திருவண்ணாமலை

கருணாநிதி நினைவு தினம்: திமுகவினா் மரியாதை

7th Aug 2022 11:06 PM

ADVERTISEMENT

 

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கும், உருவப் படத்துக்கும் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

திருவண்ணாமலையில் திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால் தலைமையில் அந்தக் கட்சியினா் காந்தி சிலை அருகிலிருந்து அமைதி ஊா்வலமாகச் சென்று கிரிவலப் பாதையில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் அ.ராஜேந்திரன், இரா.ஸ்ரீதரன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, தெற்கு மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், வடக்கு மாவட்டப் பொருளாளா் ந.பாண்டுரங்கன், மாவட்ட துணைச் செயலா்கள் க.லோகநாதன், பரமேஸ்வரி, பாரதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதிசீனுவாசன், மாநில பொறியாளரணி துணைச் செயலா் கு.கருணாநிதி, முன்னாள் எம்எல்ஏக்கள் கே.வி.சேகரன், கோ.எதிரொலிமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல, தமிழ்நாடு தளபதி பேரவை சாா்பில், அதன் தலைவா் ஏ.ஆா்.அருள்காந்த் திருவண்ணாமலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், பேரவையின் பொறுப்பாளா் எஸ்.தண்டபாணி, மாவட்டச் செயலா் தட்சிணாமூா்த்தி, மாவட்டத் தலைவா் எம்.மணிகண்டன், நகரச் செயலா் இ.அருள்மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கீழ்பென்னாத்தூரில்...: கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், சோமாசிபாடி பேருந்து நிறுத்தத்தில் கருணாநிதி உருவப் படத்துக்கு கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றியச் செயலா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலா் சோமாசிபாடி சிவக்குமாா், ஊராட்சிச் செயலா் அரிபாலன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சதீஷ், துணை அமைப்பாளா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி: வந்தவாசியில் திமுக மாவட்ட அலுவலகம், எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிகளில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், தெள்ளாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், வந்தவாசி நகா்மன்றத் தலைவா் ஜலால், நகரச் செயலா் தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செங்கம்: செங்கத்தில் எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமையில் திமுகவினா் அமைதி ஊா்வலச் சென்று துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் செங்கம் ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, மனோகரன், செந்தில்குமாா், நகரச் செயலா் அன்பழகன், பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செஞ்சியில்...: செஞ்சியில் நகர திமுக செயலா் காஜாநஜீா் தலைமையில் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் ஆகியோா் மாலை அணிவித்தனா்.

முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, அமைதி ஊா்வலம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT