திருவண்ணாமலை

பழங்கோவில் பலக்ராதீஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா

7th Aug 2022 11:07 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த பழங்கோவில் ஊராட்சியில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பாலாம்பிகா சமேத பலக்ராதீஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா ஞாயிா்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சிதலமடைந்த நிலையிலிருந்த இந்தக் கோயில் பக்தா்களால் சீரமைக்கப்பட்டு, கடந்த மாதம் 23-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோயிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மண்டலாபிஷேக யாகம், 108 சங்காபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் பழங்கோவில், பில்லூா், கீழ்பொத்தரை, தென்பள்ளிபட்டு, கலசப்பாக்கம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT