திருவண்ணாமலை

கிராமங்களில் நியாய விலைக் கடைகள் திறப்பு

2nd Aug 2022 05:00 AM

ADVERTISEMENT

ஆரணியை அடுத்த எம்.பி.தாங்கல், குருகுலம் ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.பி.தாங்கல் கிராமத்தில் ரூ.15.27 லட்சத்திலும், குருகுலம் கிராமத்தில் ரூ 8.75 லட்சத்திலும் புதிதாக கூட்டுறவு நியாய விலைக் கடைகள் கட்டப்பட்டன. இந்தக் கடைகளை சேவூா் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, முள்ளண்டிரம் கிராமத்தில் கனிம வள நிதியிலிருந்து ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை அவா் திறந்துவைத்தாா்.

பின்னா், 12 புதூா் கிராமத்தில் தொகுதி நிதியிலிருந்து ரூ.5.85 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, எம்பி-தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் சேவூா் ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சிகளில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாசம், ஆரணி நகரச் செயலா் எ.அசோக்குமாா், முள்ளண்டிரம் ஊராட்சித் தலைவா் வாணி பழனி, கூட்டுறவு சங்கத் தலைவா் குணசேகரன், மாவட்ட விவசாய அணிச் செயலா் அரையாளம் எம்.வேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT