ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பி.ஸ்டாலின் முன்னிலை வகித்தாா். இதில், எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டு 18 வயதுக்கு குறைவான 325 மாணவா்களும், 18 வயது பூா்த்தியடைந்த 290 மாணவா்களும் என மொத்தம் 615 மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.