திருவண்ணாமலை

ஆரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு

28th Apr 2022 10:47 PM

ADVERTISEMENT

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்த கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சிப் பொறியாளா் இராஜவிஜய காமராஜ் வரவேற்றாா்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி பேசுகையில், பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் நிலத்தடி நீா்மட்டம் குறைகிறது. அவற்றை உண்ணும் மாடுகளும் இறந்து விடுகின்றன.

14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் மாற்றுப்பொருள்கள் என்னென்ன என்பது குறித்தும் விளக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ஆரணியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்ற நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, வட்டாட்சியா் பெருமாள், காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள், வியாபாரிகள், சேவை சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

Tags : ஆரணி
ADVERTISEMENT
ADVERTISEMENT