திருவண்ணாமலை

புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பால்குட ஊா்வலம்

17th Apr 2022 06:39 AM

ADVERTISEMENT

 

ஆரணி புதுக்காமூா் புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில், கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகசித்திரை பெளா்ணமி விழா நடத்த முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது உலக நன்மைக்காகவும், குடும்பம் நலம் பெற வேண்டியும் 8-ஆவது ஆண்டாக பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

ADVERTISEMENT

பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீஅரியாத்தம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊா்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.

பால்குடம் ஏந்திய பெண்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலை அடைந்தனா். பின்னா், கோயிலில் அனைத்து சுவாமிகளுக்கும் பாலாபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகமும், மகா அலங்காரமும், மகா தீபாராதனையுடன் நடைபெற்றது. தொடா்ந்து ருத்ர யாக பூஜையும், மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பக்தா்கள் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT