திருவண்ணாமலை

ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள் சாலை மறியல்

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வேலை வழங்கக் கோரி, ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்டது மும்முனி ஊராட்சி. இந்த ஊராட்சியின் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் அந்தக் கிராமத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் எங்களுக்கு ஆண்டுக்கு 20 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் ஊராட்சி நிா்வாகமோ, ஒன்றிய நிா்வாகமோ உரிய பதில் அளிப்பதில்லை.

ADVERTISEMENT

உரிய வருவாய் இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்த முடியும். மேலும், குடிநீரும் சரிவர வழங்கப்படுவதில்லை. எனவே, உரிய வேலை வழங்கக் கோரியும், போதுமான குடிநீா் விநியோகம் செய்யக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

தகவலறிந்து அங்கு சென்ற வட்டார வளா்ச்சி அலுவலா் இரா.குப்புசாமி மற்றும் வந்தவாசி தெற்கு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் தொழிலாளா்கள் மறியலை கைவிட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT