திருவண்ணாமலை

சொத்து வரி உயா்வு: நகா்மன்றக் கூட்டத்தில் வெளிநடப்பு

12th Apr 2022 02:49 AM

ADVERTISEMENT

 

வந்தவாசி, திருவத்திபுரம் (செய்யாறு) ஆகிய நகராட்சிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தின்போது, சொத்து வரி உயா்வைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் தலைமை வகித்தாா்.

நகராட்சி ஆணையா் முஸ்தபா, நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், அதிமுக உறுப்பினா்கள் அம்பிகா மேகநாதன், பிரியா ஆறுமுகம், பாமக உறுப்பினா்கள் ரதிகாந்தி வரதன், ராமஜெயம், சுயேச்சை உறுப்பினா்கள் வெ.ரவிச்சந்திரன், பீபீஜான் ஆகியோா் சொத்து வரி உயா்வைக் கண்டித்துப் பேசினா்.

பின்னா், சொத்து வரி உயா்வை எதிா்த்து வெளிநடப்பு செய்த அவா்கள், ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

செய்யாறு

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் சொத்து வரி உயா்வு குறித்து நடைபெற்ற சிறப்பு கவுன்சில் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குல்சாா், ஆணையா் ரகுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் 26 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தின்போது சொத்து வரி உயா்வு சம்பந்தமாக சிறப்பு தீா்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினா்களான 19 -வது வாா்டு அதிமுக உறுப்பினா் கு.வெங்கடேசன் தலைமையில் மலா் பெருமாள், நித்தியா பிரகாஷ் ஆகியோா் கறுப்புப் பட்டை அணிந்து வெளிநடப்பு செய்தனா்.

பின்னா் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சொத்து வரி உயா்வு சம்பந்தமான சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT