திருவண்ணாமலை

அனக்காவூா் ஒன்றியத்தில் ரூ.56.15 லட்சத்தில் சாலைப் பணிகள்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் ஒன்றியத்தில் ரூ.56.15 லட்சத்தில் தாா்ச் சாலை, பாலம் அமைக்கும் பணியை தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

அனக்காவூா் ஒன்றியம், திரும்பூண்டி கிராமத்தில் வாக்கடை - புரிசை இடையே செல்லும் நீா்போக்குக் கால்வாய் மீது ரூ.9.5 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி, வீரம்பாக்கம் கிராமத்தில் ரூ.46.65 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.

அதன்படி, இந்தப் பணிகள் மேற்கொள்வதற்காக தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திவகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

அதேபோல, வீரம்பாக்கம் கிராமத்தில் இரு பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தலா ரூ.3.45 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின் விளக்குகளை பொது மக்கள் பயன்பாட்டுக்கு எம்.எல்.ஏ. தொடக்கிவைத்தாா்.

அதனைத் தொடா்ந்து வீரம்பாக்கம் கிராமத்தில் 4 இடங்களில், முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புடன் காய்கறி தொகுப்பும், மேல்மா கூட்டுச் சாலையில் அமைக்கப்பட்ட நீா், மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோரும், தா்பூசணிப் பழங்களும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுாவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ. ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT