வந்தவாசியை அடுத்துள்ள மாம்பட்டு அண்ணா நகா் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசை பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் மூலவா் முத்துமாரியம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாளித்தாா்.
மேலும், கோயில் வளாகத்தில் தன்வந்திரி மூலமந்திர மகா யாகம் நடைபெற்றது. மாலையில் உத்ஸவா் முத்துமாரியம்மனுக்கு விசேஷ பச்சை மாலை சாற்றி ஸ்ரீசாமுண்டீஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு கோயில் வளாகத்தில் அம்மன் உலா, அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுதல், அன்னதானம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.இலட்சுமண சுவாமிகள் பூஜைகளை செய்தாா்.