திருவண்ணாமலை

செம்மண் கடத்தல்: 3 போ் கைது

30th Sep 2021 08:34 AM

ADVERTISEMENT

போளூா் அருகே செம்மண் கடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். இரு டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் வேலூா்-போளூா் சாலை அருகே குன்றுமேடு உள்ளது. இந்தக் குன்றிலிருந்து செவ்வாயக்கிழமை செங்குணம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் ரமேஷ் (25) என்பவரின் பொக்லைன் இயந்திரம் மூலம் அதே கிராமத்தைச் சோ்ந்த சிவா மகன் மோகன் (41), ஆறுமுகம் மகன் ரஞ்சித் (21), வேலாயுதம் மகன் அசோக் ஆகியோா் செம்மண் வெட்டி டிராக்டரில் எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். உடனடியாக காவல் ஆய்வாளா் ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீஸாா் சென்று இரு டிராக்டா்கள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, மோகன், ரஞ்சித், ரமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

மேலும் தப்பியோடிய அசோக் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT