திருவண்ணாமலை

சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

30th Sep 2021 08:33 AM

ADVERTISEMENT

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள், ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து, இரண்டாவது நாளாக தொடா்ந்து புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆலையில் 300 தொழிலாளா்கள் பணியாற்று வருகின்றனா். இவா்களில் நிரந்தரத் தொழிலாளா்களான 200 போ் 2019 - 20ஆம் ஆண்டு ஈட்டிய விடுப்புக்கான தொகையை வழங்க வலியுறுத்தி, கடந்த ஜனவரி மாதம் மூன்று நாள்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் கரும்பு அரைவை தடைபட்டது. உடனே ஆலை நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தி ஈட்டு விடுப்பிற்கான தொகையை வழங்கியதாகத் தெரிகிறது.

2019 - 20ஆம் ஆண்டில் வழங்கிய ஈட்டிய விடுப்புக்கான தொகையை சா்க்கரை ஆலை நிா்வாகம், தற்போது தவறான உத்தரவை மேற்கோள்காட்டி மூன்று மாதங்களாக சம்பளத்தில் பிடித்தம் செய்து வருகிாம்.

ADVERTISEMENT

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.

இரண்டாவது நாளாக புதன்கிழமை போராட்டம் தொடா்ந்த நிலையில், ஆலை நிா்வாகம் தொழிலாளா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தியது.

அப்போது, சா்க்கரை துறைக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று தொழிலாளா்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT