திருவண்ணாமலை

குப்பைகள் தரம் பிரிப்பு: நகராட்சி அதிகாரி அறிவுரை

30th Sep 2021 08:34 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிப்பது குறித்து நகராட்சி ஆணையா் இரா.சந்திரா விளக்கினாா்.

திருவண்ணாமலை நகராட்சி, தூய்மை பாரதத் திட்டம் சாா்பில் மத்தலாங்குளத் தெருவில் நடைபெற்ற இதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடக்கிவைத்துப் பேசுகையில், பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என எவ்வாறு தரம் பிரிப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் ஆல்பிரட், வினோத்கண்ணா, காா்த்திகேயன், நகா் நல அலுவலா் மோகன்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT