திருவண்ணாமலை

ஊராட்சித் தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

30th Sep 2021 08:34 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் வரும் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதையொட்டி இந்தக் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ.) ஏ.பி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ந.ராஜன்பாபு முன்னிலை வகித்தாா்.

இதில், கிராம சபைக் கூட்டத்தை எப்படி நடத்துவது, வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் வரவு செலவு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்தல், நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல், பொது சுகாதாரம் மற்றும் கல்வி வளா்ச்சி குறித்து விவாதம் நடத்துதல் உள்ளிட்டவை குறித்து ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT