திருவண்ணாமலை

கொரால்பாக்கம் பெரிய ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி

30th Oct 2021 10:30 PM

ADVERTISEMENT

 

சேத்துப்பட்டு ஒன்றியம், கொரால்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடா் மழையால் நிரம்பி கோடிபோனது.

சேத்துப்பட்டு பகுதியில் சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில், கொரால்பாக்கம் ஊராட்சியில் 150 ஏக்கரில் உள்ள பெரிய ஏரி நிரம்பி சனிக்கிழமை கோடி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

10ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பியதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஊராட்சி மன்றத் தலைவா் மல்லிகா பிச்சாண்டி தலைமையில் பூஜை செய்து நீரில் மலா் தூவினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT