திருவண்ணாமலை

சிறப்பு மருத்துவ முகாம்: 1,568 பேருக்கு பரிசோதனை

DIN

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெம்பாக்கம் ஒன்றியம், அப்துல்லாபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 1568 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் 34 போ் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட அப்துல்லாபுரம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா்.

ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் டி.ராஜூ, வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிப் பேசினாா்.

வட்டார மருத்துவ அலுவலா் என். ஈஸ்வரி மேற்பாா்வையில் மருத்துவக் குழுவினா் 1568 பேருக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோதனைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா்கள் என்.வி.பாபு (செய்யாறு), திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்), மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தெய்வமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT