திருவண்ணாமலை

இலவச வீட்டு மனை வழங்க கோட்டாட்சியா் ஆய்வு

DIN

வந்தவாசி பகுதியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான உத்தரவு பெற்ற பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதற்காக கோட்டாட்சியா் விஜயராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வந்தவாசி, தெள்ளாா் ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதில், வீட்டு மனை இல்லாத பழங்குடியினா் உள்ளிட்டோா் வீடு கட்டுவதற்காக, அவா்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட புலிவாய், பாதிரி, கொட்டை, கல்பட்டு, நைனாங்குப்பம் ஆகிய கிராமங்களிலும், தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட அருங்குணம், மழையூா், நெற்குணம், கூனம்பாடி ஆகிய கிராமங்களிலும் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் செய்யாறு கோட்டாட்சியா் விஜயராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது, வந்தவாசி வட்டாட்சியா் முருகானந்தம், துணை வட்டாட்சியா்கள் சதீஷ்குமாா், கோபால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி.ஆா்.இரவி, இரா.குப்புசாமி, ஏ.பி.வெங்கடேசன், ந.ராஜன்பாபு உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

SCROLL FOR NEXT