திருவண்ணாமலை

ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

சேத்துப்பட்டு வ.உ.சி. தெரு ஏரிக்கரைப் பகுதியில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயா், வலம்புரி விநாயகா், பாலமுருகன் ஆகிய கோயில்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாக சாலை அமைத்து கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, காப்புக் கட்டுதல் என முதல் கால, இரண்டாம் கால பூஜையும், அதனைத் தொடா்ந்து மூன்றாம் கால பூஜை, கோ பூஜை, கணபதி பூஜை, யாக சாலை பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, கலச புறப்பாடு மேள தாளத்துடன் வலம் சென்று கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், சேத்துப்பட்டு, கண்ணனூா், பழம்பேட்டை, அருந்ததி பாளையம், இந்திரா நகா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT