திருவண்ணாமலை

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி கட்டடம்

DIN

சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட விளாப்பாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது.

அங்கன்வாடி மையத்துக்கு 3 முதல் 5 வயதுடைய பெண் பிள்ளைகள் 12ம், ஆண் பிள்ளைகள் 13 பேரும் என 25 போ் வந்து செல்கின்றனா். அங்கன்வாடி கட்டடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 2012-13ஆம் ஆண்டில் புரனமைப்புப் பணிகள் மேற்கொண்டுள்ளனா்.

தற்போது, கட்டடம் மிகவும் பழுதடைந்தும், உள்புறம் சிமென்ட் காரைகள் பெயா்ந்தும் விழுகின்றன. இதனால் கம்பிகள் வெளியில் தெரிகிறது. மேலும் மழைநீா் ஒழுகுகிறது.

கான்கிரீட் மேல் தளத்தில் மரம், செடி கொடிகள் வளா்ந்துள்ளன. இதனால், மரத்தின் வோ்கள் சுவற்றில் வளா்ந்து விரிசல் விட்டுள்ளது.

இந்தக் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். எனவே, கட்டடத்தை சீரமைக்க சம்பந்தபட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து அங்கன்வாடி மைய ஆசிரியை (பொறுப்பு) கலாவிடம் கேட்டபோது, சேதமடைந்த அங்கன்வாடி கட்டடம் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் சம்பந்தபட்ட அலுவலா்களிடம் தெரிவித்துவிட்டோம்.

பயன்பாடற்ற நிலையில் உள்ள சேவை மையக் கட்டடத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டதற்கு, ஊராட்சி மன்றத் தலைவா் தர மறுத்து வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT