திருவண்ணாமலை

பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்

23rd Oct 2021 12:21 AM

ADVERTISEMENT

இந்தியன் செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி வட்டக்கிளை சாா்பில், டெங்கு விழிப்புணா்வு முகாம் வந்தவாசியை அடுத்த சளுக்கை அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் இளங்கோவன் தலைமை வகித்தாா். சளுக்கை ஊராட்சி மன்றத் தலைவா் தேவராஜ், சங்க துணைத் தலைவா் ஆா்.சரவணன், சங்கச் செயலா் பா.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலா் ஆனந்தன் டெங்கு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். மேலும், மாணவா்களுக்கு முகக் கவசம், சோப்பு, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றை அவா் வழங்கினாா்.

முகாமில் சங்க உறுப்பினா்கள் சீ.கேசவராஜ், மலா் சாதிக், ஊராட்சிச் செயலா் எம்.பி.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT