திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 1.61 லட்சம்பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு: ஆட்சியா்

DIN

 திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.23) நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் 1.61 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் 6-ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்களில் 1,04,325 பேருக்கும், 2-ஆவது கட்ட முகாம்களில் 77,085 பேருக்கும், 3-ஆவது கட்ட முகாம்களில் 75,896 பேருக்கும், 4-ஆவது கட்ட முகாம்களில் 57,225 பேருக்கும், 5-ஆவது கட்ட முகாம்களில் 80,020 பேருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இந்த நிலையில், சனிக்கிழமை 6-ஆவது கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் 1,075 முகாம்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் 1.61 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய அனைத்துத் துறை அதிகாரிகளும் மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்தாத நபா்களைக் கண்டறிந்து சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்த வைக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமரசாமி, உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

SCROLL FOR NEXT