திருவண்ணாமலை

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

23rd Oct 2021 12:21 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், துா்கையம்மன் கோயிலில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டைக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

செங்கம் அருகே ஜவ்வாதுமலை சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ஓடைகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள குப்பனத்தம் அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இதன் காரணமாக, துா்கையம்மன் கோயிலில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டைக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. அந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் ஒரு கி.மீ. தொலைவு சுற்றுச் சென்று அங்குள்ள மேம்பாலத்தின் வழியாக மற்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.

இதனிடையே, தளவாநாய்கன்பேட்டை பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலத்தின் வழியாக பொதுமக்கள் செல்ல வேண்டாமென பொதுப் பணித் துறையினரும், பேரூராட்சி நிா்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ADVERTISEMENT

Tags : செங்கம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT