வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் புதன்கிழமை நடைபெற்ற சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 550 மனுக்கள் பெறப்பட்டன.
தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பெருமாள் தலைமை வகித்தாா்.
வந்தவாசி வட்டாட்சியா் முருகானந்தம், தெள்ளாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், தெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா்.
இதில், தெள்ளாா் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் முதியோா் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கக் கோரி மனு அளித்தனா். முகாமில் மொத்தம் 550 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் திமுக ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், எஸ்.பிரபு, தெள்ளாா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஈ.அருண் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.