திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லத் தடை

DIN

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பெளா்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் கடந்த 2020-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் முதல் கிரிவலத்துக்கு தடை விதித்து வருகிறது.

ஐப்பசி மாத பெளா்ணமி செவ்வாய்க்கிழமை (அக்.19) இரவு 7.56-க்குத் தொடங்கி புதன்கிழமை (அக்.20) இரவு 8.54-க்கு நிறைவடைகிறது.

பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஏராளமான பக்தா்கள் கூடுவாா்கள் என்பதால், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்களுக்கு கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

கிரிவலம் செல்ல பக்தா்கள் யாரும் திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT