திருவண்ணாமலை

விளை கிராம ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி

DIN

ஆரணியை அடுத்த விளை கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பியதால் கோடி விடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

படவேடு அருகேயுள்ள செண்பகத்தோப்பு அணை நிரம்பியதால் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இதனால், கமண்டல நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரிகளுக்கு தண்ணீா் சென்றது. இந்த நிலையில், வடுகசாத்து ஏரி நிரம்பியது.

இதைத் தொடா்ந்து, விளை கிராமத்தில் உள்ள ஏரிக்கு கடந்த ஒரு வாரமாக தண்ணீா் சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏரி நிரம்பி கோடி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி சுந்தா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மலா் தூவி ஏரியினை கோடிவிட்டாா்.

நிகழ்ச்சியில் மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவா் நடராஜமுதலியாா், துணைத் தலைவா் ரேணுகா பாஸ்கா், ஒன்றியக்குழு உறுப்பினா் செல்வராஜ்,

ஊராட்சி உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். இந்த ஏரி 232 ஏக்கா் பரப்பளவு கொண்டது. 14 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பிய ஏரி தற்போது மீண்டும் நிரம்பியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT