திருவண்ணாமலை

கோயில் உண்டியலில்பூட்டை உடைத்து திருட்டு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த மும்முனி புறவழிச்சாலையில் ஸ்ரீபச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி சண்முகம் வியாழக்கிழமை பூஜையை முடித்துவிட்டு, இரவு வழக்கம்போல கோயிலை பூட்டிச் சென்றாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் கோயில் வளாகத்திலிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடினா். பின்னா், சிலையை திருட கோயிலின் உள்ளே நுழைவதற்காக, பிரதான மரக் கதவின் முன் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கிரில் கதவின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், பிரதான மரக் கதவையும் உடைக்க முயன்றனா்.

ஆனால், அந்தக் கதவை உடைக்க முடியாததால் கதவுக்கு தீவைத்தனா். இருப்பினும், கதவை திறக்க முடியாததால், கோயில் வளாகத்திலிருந்த சூலத்தை எடுத்து கோயில் பக்கவாட்டு சுவரில் துளையிட்டுள்ளனா். அப்போது, சூலம் உடைந்ததால், துளையிடும் முயற்சியை பாதியில் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை காலை தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், கோயிலுக்கு சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

SCROLL FOR NEXT