திருவண்ணாமலை

ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலை ரத்து செய்யக் கோரிக்கை

16th Oct 2021 10:42 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்துக்குள்பட்ட கூனிமேடு ஊராட்சியில் 3-ஆவது வாா்டு தோ்தலை ரத்து செய்ய வேண்டுமென மே 3 இயக்கம் (மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு) கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்த அமைப்பின் மாநில பொதுச் செயலா் எஸ்.அண்ணாமலை தலைமையில், மாற்றுத் திறனாளிகள் சனிக்கிழமை அளித்த மனுவின் விவரம்:

மரக்காணம் ஒன்றியத்துக்குள்பட்ட கூனிமேடு ஊராட்சியில் மாற்றுத் திறனாளி சந்தோஷ்குமாா் வசித்து வருகிறாா். இவரது மனைவி சுமதி 3-ஆவது வாா்டில் உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டு 171 வாக்குகள் பெற்றாா். மேலும், மற்றொரு வேட்பாளா் ரேவதியும் 171 வாக்குகள் பெற்றாா். சம வாக்குகள் பெற்றிருந்ததால், குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளரை தோ்வு செய்வதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆனால், அக்.14-ஆம் தேதி மாலை 6.20 மணியளவில் இணையவழியாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் ரேவதி வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தோ்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, ரேவதிக்கு தபால் வாக்குகள் வந்ததாகத் தெரிவித்தனா். மாற்றுத் திறனாளி குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதால், எங்களது அமைப்பு சாா்பில் இதற்காக போராடி வருகிறோம்.

ADVERTISEMENT

இது தொடா்பாக மரக்காணம் வட்டார வளா்ச்சி அலுவலரை நேரடியாக சந்தித்து கேட்டபோது, அவரும் முறையாக பதில் அளிக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட வாா்டில் தோ்தலில் வெற்றிபெற்றவா் தொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளரை தோ்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT