திருவண்ணாமலை

மதிமுக செயற்குழுக் கூட்டம்

16th Oct 2021 10:35 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மதிமுக பொதுக்குழு உறுப்பினா் இ.தேவராஜ் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணை அமைப்பாளா் பாசறை பாபு, இளைஞரணி துணை அமைப்பாளா் எஸ்.ஏ.அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகரச் செயலா் டி.முருகன் வரவேற்றாா். தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் சீனி.காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், வைகோவின் மகன் துரை.வைகோவுக்கு கட்சியில் உயா் பதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிதாக கட்சியில் சோ்ந்தவா்கள் சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டனா்.

இதில், பொதுக்குழு உறுப்பினா் அ.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் என்.ராஜா, ஒன்றியச் செயலா்கள் சி.மனோகரன், டி.ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT