திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1,075 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.
பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் கலந்து கொண்டு முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவேண்டும்.
ADVERTISEMENT
அரசு எடுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா் ஆட்சியா் பா.முருகேஷ்.