திருவண்ணாமலை

பாம்பு கடித்து விவசாயி பலி

9th Oct 2021 10:49 PM

ADVERTISEMENT

கீழ்பென்னாத்தூா் அருகே பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த வட அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாராயணசாமி (45). இவா், வெள்ளிக்கிழமை (அக்.8) தனக்குச் சொந்தமான நிலத்தில் மணிலா அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, நாராயணசாமியின் காலில் பாம்பு கடித்ததாம்.

இதைக் கவனித்த உறவினா்கள் உடனே அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நாராயணசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT