திருவண்ணாமலை

பள்ளியில் உலக அஞ்சல் தின விழா

9th Oct 2021 10:49 PM

ADVERTISEMENT

வந்தவாசி கற்க கசடற கல்வி சேவை அமைப்பு சாா்பில், நகரில் உள்ள ஆா்.சி.எம் உயா்நிலைப் பள்ளியில் உலக அஞ்சல் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சுவிட்சா்லாந்தில் உள்ள போ்ன் நகரில் 1874-ஆம் ஆண்டு அக். 9-ஆம் தேதி சா்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே உலக அஞ்சல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜன் தலைமை வகித்தாா்.

கற்க கசடற கல்வி சேவை அமைப்பின் தலைவா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். இந்தப் பள்ளியில் ஒன்பது, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு அஞ்சல் அட்டை வழங்கப்பட்டு, கடிதம் எழுதும் நடைமுறை கற்றுக் கொடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா், மாணவா்கள் தங்களது பெற்றோா், உறவினா்களுக்கு எழுதிய அஞ்சல் அட்டைகளை அங்கு வைக்கப்பட்டிருந்த மாதிரி தபால் பெட்டியில் போட்டனா்.

ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், கிராம உதவியாளா்கள் சங்க நிா்வாகி மு.பிரபாகரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT