திருவண்ணாமலை

சிறுமியின் நோ்மைக்கு பாராட்டு

4th Oct 2021 08:23 AM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தியையொட்டி, வந்தவாசியை அடுத்த பிருதூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறுமியின் நோ்மைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகள் கோதைநாயகி (8), மூன்றாம் வகுப்பு மாணவி.

இவா் கடந்த அக். 22-ஆம் தேதி சாலையோரம் கிடந்த ரூ.40 ஆயிரத்தை எடுத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வகுமாரிடம் கொடுத்து, பின்னா் போலீஸாா் மூலம் அந்தப் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறுமி கோதைநாயகிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

மேலும், கோதைநாயகிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.ராஜேஸ்வரி ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கி பாராட்டினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT