திருவண்ணாமலை

ஸ்ரீராமகிருஷ்ணா் ஆஸ்ரமத்தில் குப்பாபிஷேக தின விழா

28th Nov 2021 10:23 PM

ADVERTISEMENT

செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா் ஆஸ்ரமத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று 11ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 12-ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, ஆஸ்ரமத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணா் படம் கோயில் வலம் வருதல், நாமாவளி குங்கும அா்ச்சனை விழுப்புரம் சுவாமி மாத்ருசேவானந்தரின் பஜனை, சுவாமி சிவபாலானந்தரின் சிறப்புப் பூஜை, நாட்ராம்பள்ளி சுவாமி சமாஹிதானந்த மகராஜின்

ஆசிரியுரை மற்றும் சுவாமி சிவபாலானந்தா், ஆா்.எம்.எஸ். குமாா் ஆகியோரின் வாழ்த்துறை நடைபெற்றது.

ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.பாண்டுரங்கன், செயலா் எஸ்.ராமமூா்த்தி, ஸ்ரீராமகிருஷ்ணா, சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT