திருவண்ணாமலை

செய்யாற்றில் ஆதிதிராவிடா் மகளிா் விடுதி திறப்பு

28th Nov 2021 10:23 PM

ADVERTISEMENT

செய்யாற்றில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கான ஆதிதிராவிடா் நல விடுதியை ஒ.ஜோதி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் ஆதிதிராவிடா் மாணவிகள் தங்கி கல்வி கற்க வசதியாக, வேலூா் கோட்டம், தாட்கோ மூலம் நபாா்டு நிதி ரூ.2 கோடியில் 55 மாணவிகள் தங்கும் வகையில்

செய்யாறு கன்னியம் நகரில் விடுதி கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்து வந்தது. விடுதியை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி குத்துவிளக்கேற்றி மாணவிகள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

நிகழச்சிக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், விடுதிக் காப்பாளா் மாரியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி முகாம்களில் ஆய்வு

இதைத் தொடா்ந்து, செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் ஒன்றியம் முக்கூா், வாழ்க்கடை, பாராசூா், வீரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவா் நாவல்பாக்கம் பி.பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ச.பாரி, மூா்த்தி, அரி, திமுக நிா்வாகிகள் ஆ.மோகனவேல், எஸ்.துரைசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT