திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,508 ஏரிகள் நிரம்பின

28th Nov 2021 10:18 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,886 ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை 1,508 ஏரிகள் நிரம்பின.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 600 ஏரிகளில் 572 ஏரிகள் முழுமையாக நிரம்பின. 27 ஏரிகள் 75 சதவீதமும், ஒரு ஏரி 50 சதவீதமும் நிரம்பியுள்ளது.

ஊரக வளா்ச்சித் துறை ஏரிகள்:

ADVERTISEMENT

மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 1,286 ஏரிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 936 ஏரிகள் முழுமையாக நிரம்பின. 211 ஏரிகள் 95 சதவீதம் நிரம்பியுள்ளன.

அணைகளுக்கு நீா்வரத்து:

சாத்தனூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் விநாடிக்கு 6,800 கன அடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இந்த நீா் முழுவதும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

குப்பனத்தம் அணைக்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இந்த நீா் முழுவதும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

மிருகண்டாநதி அணைக்கு விநாடிக்கு வரும் 257 கன அடி தண்ணீரில் விநாடிக்கு 285 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது. செண்பகத்தோப்பு அணைக்கு விநாடிக்கு வரும் 710 கன அடி தண்ணீரில் விநாடிக்கு 704 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT