திருவண்ணாமலை

பாதியிலேயே நிற்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய சாலைப் பணிகள்: காவல் துறை அதிகாரிகள் அவதி

 நமது நிருபர்

சேத்துப்பட்டு அருகே தச்சாம்பாடி பகுதியில் உள்ள காவல் துறை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்குச் செல்லும் சாலையில், தாா்ச் சாலைப் பணிகள் தொடங்கிபாதியிலேயே நிற்கின்றன. இதனால், காவல் துறை அதிகாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்கள் 6, ஊரக காவல் நிலையத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்கள் 5, வந்தவாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு

உள்பட்ட காவல் நிலையங்கள் 7, செய்யாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்கள் 7, போளூா் காவல் துணைக் காண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்கள் 6, ஆரணி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்கள் 6 என 43 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் என 100-க்கும் மேற்பட்ட காவலா்கள் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது தேவைப்படும் போது துப்பாக்கி சுடும் முறைகள் குறித்து பயிற்சி பெறுகின்றனா்.

இந்தத் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ஊராட்சியில் போளூா்-சேத்துப்பட்டு சாலையில் தேவிகாபுரம் துணை மின் நிலையம் எதிரே அரசுக்குச் சொந்தமான 10 ஏக்கா் நிலத்தில் அமைந்துள்ளது.

பயிற்சி மையத்துக்குச் செல்லும் ஒன்றரை கி.மீ. தொலைவிலான மண் சாலையை தாா்ச் சாலையாக மாற்றியமைக்க, கடந்த ஜனவரியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ரூ.15 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்க பணிகள் தொடங்கின.

ஆனால், ஜல்லிக் கற்கள் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டதோடு, பணிகள் ஏதும் நடைபெறாமல் அப்படியே உள்ளது. இரு சக்கர வாகனங்கள்கூட செல்ல முடியவில்லை. காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்குச் செல்ல முடியாமல் உள்ளனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT