திருவண்ணாமலை

ஏரி உபரி நீரால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்

27th Nov 2021 10:20 PM

ADVERTISEMENT

 

செங்கம் அருகே ஏரிகளின் உபரிநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் உள்ள ஏரிகள் தொடா் மழையால் நிரம்பி உபரிநீா் வெளியேறுகிறது.

உபரிநீா் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அதிகளவில் நீா் வெளியேறும்போது கால்வாய்களில் போகமுடியாமல் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சூழ்ந்து விடுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனா்.

ADVERTISEMENT

மேலும், ஏரி நீா் ஆங்காங்கே குட்டைபோல தேங்கி நிற்கிறது. இதில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் சூழல் உருவாகி வருகிறது.

இதனால், பக்கிரிப்பாளையம் பகுதியில் ஏரிக் கால்வாய்களை ஆக்கிரமித்து வீடு மற்றும் கட்டடங்கள் கட்டியுள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறி கிராம மக்கள் ஒன்று திரண்டு திருவண்ணாமலை-பெங்களூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வட்டாட்சியா் முனுசாமி, டிஎஸ்பி சின்னராஜ் மற்றும் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி கூட்டத்தைக் கலைத்தனா்.

இந்த மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT